லக்சா---சமையல் குறிப்புகள்
லக்சா தேவையானவை: நறுக்க...

லக்சா
தேவையானவை: நறுக்கிய சோயா பனீர் துண்டுகள் - அரை கப், காய்ந்த மிளகாய் - 6, பச்சை மிளகாய் - 8, சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய்ப் பால் - 2 கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், நூடுல்ஸ் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு, வெங்காயத்தாள் - அலங்கரிக்க.
செய்முறை: நூடுல்ஸை வேக வைத்துத் தனியாக வைக்கவும். சோயா பனீரை எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாயை ஊற வைத்து அரைக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காய விழுதை வாசனை வரும்வரை வதக்கவும். பிறகு, மிளகாய் விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் சிறிது வற்றியதும், தேங்காய்ப் பால் விட்டு கொதித்ததும் பொரித்த சோயா பனீர், சர்க்கரை, உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். ஒரு கிண்ணத்தில் நூடுல்ஸை போட்டு, மேலே இந்தக் கலவையை ஊற்றி வெங்காயத் தாளால் அலங்கரித்துப் பரிமாறவும்.
லக்சா: சோயா பனீருக்குப் பதிலாக பால் பனீரிலும் செய்யலாம். காரம் விரும்பாதவர்கள் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
Post a Comment