மூக்கடைப்பு தொல்லைகளை நீக்கும் அற்புத மூலிகை லவங்கப்பட்டை---இயற்கை வைத்தியம்
ஒவ்வாமையினால் தோன்றும் பல்வேறு வகையான மூக்கடைப்பு தொல்லைகளை நீக்கும் அற்புத மூலிகை காட்டு லவங்கப்பட்டை.சின்னமோமம் மலபாட்ரம் என்ற தாவரவியல்...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_2571.html?m=0
ஒவ்வாமையினால் தோன்றும் பல்வேறு வகையான மூக்கடைப்பு தொல்லைகளை நீக்கும் அற்புத மூலிகை காட்டு லவங்கப்பட்டை.சின்னமோமம் மலபாட்ரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாரேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பட்டைகளே, காட்டு லவங்கப்பட்டை என்றும், பெரிய லவங்கப்பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
இவை உணவிற்கும், மருந்திற்கும் பெருமளவு பயன்படுகின்றன.
இதன் பட்டைகளிலுள்ள சின்னமால்டிகைடு, யூஜினால் போன்ற ஆவியாகக்கூடிய எண்ணெய் வகைகள் சதை வளர்ச்சியை கட்டுப்படுத்தி, ஒவ்வாமையை நீக்கி, சுவாசத்தை சீர் செய்கின்றன. இவற்றிலுள்ள டைடெர்பின்கள் ஆன்டிஹிஸ்டமைன்களாக செயல்பட்டு, அலர்ஜியை தடுக்கின்றன.காட்டு லவங்கப்பட்டை, தாளிசப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சீரகம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, சுத்தம் செய்து, இடித்து, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தேன் அல்லது பாலுடன் கலந்து தினமும் 2 முறை சாப்பிட்டு வரலாம். அரை கிராம் காட்டு லவங்கப்பட்டையை பொடித்து, சலித்து தேனுடன் குழப்பி, தினமும் ஒரு வேளை உணவுக்கு பின் சாப்பிட கபம் நன்கு வெளியேறும். மூக்கடைப்பு நீங்கும்.
2 comments
மூககடைப்புக்கு சமையல் அறையில் மருந்து அருமை.
நன்றி.
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!! கருத்துக்கு நன்றியுடன் A.S. முஹம்மது அலி
Post a Comment