சமையல் குறிப்புகள்! மீல்மேக்கர் குழம்பு
மீல்மேக்கர் குழம்பு தேவையானவை: சோயா உருண்டை அல்லது மீல்மேக்கர் & 15, சின்ன வெங்காயம் & 10, பூண்டு & 10 பல், தக்காளி & 1, ச...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_8807.html?m=0
மீல்மேக்கர் குழம்பு
தேவையானவை: சோயா உருண்டை அல்லது மீல்மேக்கர் & 15, சின்ன வெங்காயம் & 10, பூண்டு & 10 பல், தக்காளி & 1, சாம்பார்பொடி & 2 டீஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப, புளி & 1 எலுமிச்சை அளவு. அரைக்க: தேங்காய் துருவல் & 2 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு & 4, சோம்பு & கால் டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், சோம்பு & கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & 1 டீஸ்பூன், பெருங்காயம் & 1 சிட்டிகை, எண்ணெய் & 6 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தையும் பூண்டையும் தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைக்கவும். சோயா உருண்டைகளை, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு குக்கரில் 1 விசில் வரும் வரை வேகவைக்கவும். நீரை வடித்துவிடவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்து, பூண்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் தக்காளியையும் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு உப்பு, புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார்பொடி சேர்க்கவும். நன்கு கொதித்ததும், சோயா உருண்டைகளை குழம்பில் போட்டு, சோயா உருண்டைகளில் குழம்பு சாரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது கெட்டியானதும் அரைத்ததைக் கரைத்து ஊற்றி, கொதித்ததும் இறக்கிவிடவும்.
Post a Comment