அசத்தலான அல்வா இது! பூசணி கோவா அல்வா
பூசணி கோவா அல்வா தேவையானவை: பூசணிக்காய் துருவியது & 2 கப், நெய் & 4 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு & 10 முதல் 15, ஏலக்காய்தூ...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3890.html?m=0
பூசணி கோவா அல்வா
தேவையானவை:
பூசணிக்காய் துருவியது & 2 கப்,
நெய் & 4 டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு & 10 முதல் 15,
ஏலக்காய்தூள் & 2 டீஸ்பூன்,
கேசரி பவுடர் & 2 சிட்டிகை,
சர்க்கரை இல்லாத கோவா & அரை கப்,
சர்க்கரை & இனிப்புக்கு ஏற்றவாறு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு, பூசணிக்காய் துருவலைப் போட்டு நன்றாக வதங்கியதும், கோவாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, மேலும் கிளறவும். பச்சை வாசனை போனதும், சர்க்கரையைச் சேர்த்து, கைவிடாமல் கிளறவேண்டும். கேசரி கலரை சேர்க்கவும். ஏலப்பொடியையும் தூவவும். நெய்யில் முந்திரித்துண்டுகளை வறுத்துப் போட்டு இறக்கவும். விரைவாக செய்யக்கூடிய, அசத்தலான அல்வா இது!
Post a Comment