கைமணம்! தேங்காய் பால் சூப்
தேங்காய் பால் சூப் தேவையான பொருட்கள்: தேங்காய் பால் - அரை முடி பாதாம் பருப்புத் தூள் - 1 மேசைக் கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தே...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2246.html?m=0
தேங்காய் பால் சூப்
தேவையான பொருட்கள்:
தேங்காய் பால் - அரை முடி
பாதாம் பருப்புத் தூள் - 1 மேசைக் கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக் கரண்டி
செய்முறை:
தேங்காய்ப் பால், கடுகு, வெங்காயம் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ளவும். காய்கறி வேக வைத்த சாறு 3 கப்புடன் மசாலாவைச் சேர்த்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெங்காயத்தை நெய்யில் வதக்கி சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கரண்டியால் கிளறிவிடவும். சில நிமிட கிளறலுக்குப் பின் தேங்காய்ப் பால் சூப் தயார்.
Post a Comment