சமையல் குறிப்புகள்! பொரித்த பஃப்
பொரித்த பஃப் தேவையானவை: நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன். மேல் மாவுக்கு: மைதா மாவு - ஒரு கப், பேக்கிங் பவுடர், சமையல் ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_1676.html?m=0
பொரித்த பஃப்
தேவையானவை: நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன். மேல் மாவுக்கு: மைதா மாவு - ஒரு கப், பேக்கிங் பவுடர், சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, உப்பு - கால் டீஸ்பூன். பூரணத்துக்கு: பொடியாக நறுக்கிய காய்கறி கலவை - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பட்டை-லவங்கம்-ஏலக்காய் பொடித்த தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்களில் உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பிரஷரை மெதுவாக எடுத்துவிட்டு, தண்ணீரை வடித்து விடவும் (இந்தத் தண்ணீரை ரசம் (அ) கூட்டில் சேர்த்துக் கொள்ளலாம்). கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந் ததும் வெங்காயம், மிளகாய்த்தூள் சேர்க்கவும். பச்சை வாசனை போனதும், வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, மசாலாத்தூள், தேவையான உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். மேல் மாவுக்குக் கொடுத்துள்ளவற்றை மிருதுவாகப் பிசைந்து கொள்ளவும். அரிசி மாவு, நெய்யை ஒன்றாகக் குழைத்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவிலிருந்து சிறிது எடுத்து மெல்லிய சிறு பூரிகளாக இட்டுக் கொள்ளவும். குழைத்து வைத்துள்ள நெய்க் கலவையை சிறிது எடுத்து, பூரியின் மேல் தடவி அதன் மேல் மற்றொரு பூரியை வைக்கவும். இதே போல் 4 பூரிகளை செய்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொள்ளவும்.
இதன் நடுவில் சிறிது காய்கறி பூரணத்தை வைத்து மடித்து தண்ணீர் தொட்டு ஒட்டவும். இது அரை வட்டமாக வரும். இதனை அப்படியேவோ (அ) பக்கங்களை வெட்டி நீள் சதுரமாகவோ செய்து, மிதமான தீயில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Post a Comment