அசத்தல் சுவையில் வாழைக்காய் மனோகரம்
வாழைக்காய் மனோகரம் தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 1, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், வறுத்து அரைத்த உளுத்தம் பொடி - ஒரு டீஸ்பூ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_139.html?m=0
வாழைக்காய் மனோகரம்
தேவையானவை: முற்றிய வாழைக்காய் - 1, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், வறுத்து அரைத்த உளுத்தம் பொடி - ஒரு டீஸ்பூன் சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒன்றரை கப், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை வேக வைத்து, தோலுரித்து, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, உளுத்தம் பொடி, வெண்ணெய் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசையவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து கல், மண் போக வடிகட்டி, கெட்டிப்பாகு காய்ச்சவும். பிசைந்த மாவை, ஒரு துளையுள்ள தேன்குழல் அச்சில் போட்டு, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வெல்லப் பாகு சூடாக இருக்கும்போதே சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள் இரண்டையும் அதில் சேர்த்துக் கலக்கவும். கூடவே பொரித்த தேன் குழலையும் சேர்த்துக் கலக்கவும்.
கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும் இந்த மனோகரம்.
Post a Comment