சமையல் குறிப்புகள்! கீரை&கேரட் புலாவ்
கீரை&கேரட் புலாவ் தேவையானவை: பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை & ஒரு கப், கேரட் & கால் கப் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் &...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_3094.html?m=0
கீரை&கேரட் புலாவ்
தேவையானவை: பொடியாக நறுக்கிய ஏதேனும் ஒரு கீரை & ஒரு கப், கேரட் & கால் கப் (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் & 1 (பொடியாக நறுக்கவும்), சோம்பு, நெய் & தலா ஒரு டீஸ்பூன், ஏலக்காய் & 1, கிராம்பு & 2, மிளகாய்த்தூள் & ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் & 2 (நீளவாக்கில் நறுக்கவும்), பட்டை & ஒரு சிறிய துண்டு, பாஸ்மதி அரிசி & ஒரு கப், உப்பு & தேவையான அளவு, மல்லித்தழை & சிறிது.
செய்முறை: அரிசியைக் களைந்து 15 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் நெய்யை விட்டு, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய், பட்டை சேர்த்து வறுக்கவும். பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரை, கேரட்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி, அரிசி, உப்பு, மிளகாய்த்தூள், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து சமைக்கவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.
________________________________________
Post a Comment