உள்ளம் கேட்குமே.... ஓட்ஸ் குக்கீஸ்!
ஓட்ஸ் குக்கீஸ் தேவையானவை: சர்க்கரை 2 கப், வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், பால் அரை கப், சாக்லெட் பவுடர் கால் கப், ஓட்ஸ் 3 கப். செய்முறை: சர்க்கர...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_7381.html?m=0
ஓட்ஸ் குக்கீஸ்
தேவையானவை: சர்க்கரை 2 கப், வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன், பால் அரை கப், சாக்லெட் பவுடர் கால் கப், ஓட்ஸ் 3 கப்.
செய்முறை: சர்க்கரை, வெண்ணெய், பால் மற்றும் சாக்லெட் பவுடரை ஒன்றாகக் கலக்கவும். இதை மிதமான தீயில் வைத்து, கொதிக்கும் வரை கை விடாமல் கிளறவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்து மூன்று நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி, ஓட்ஸ் சேர்க்கவும். ஒரு பட்டர் பேப்பரில் ஒரு டேபிள்ஸ்பூன், இந்தக் கலவையை வைக்கவும். சிறிது நேரத்தில் இது இறுகி, கெட்டியாகிவிடும். ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
ஓட்ஸ் குக்கீஸ்: கால் கப் முந்திரி, பாதாம் சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் கூடும்.
Post a Comment