ஆரோக்கிய சமையல்! முட்டைஉருளை மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, முட்டை - 1, வெங்-காயம் - 1, மிளகாய்த்-தூள் - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3874.html?m=0
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, முட்டை - 1, வெங்-காயம் - 1, மிளகாய்த்-தூள் - கால் டீஸ்பூன், தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை வதக்கி, உருளைக்கிழங்கு, உப்பை சேர்த்து நன்றாக வதக்கி, வேகவிடவும். வெந்ததும், முட்டையை உடைத்து அதில் சேர்க்கவும். மிளகாய்த்தூள், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும். முட்டை, மசாலாவுடன் சேர்ந்து உதிர்ந்தாற்போல் வரும்போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
பிரெட் (அ) சப்பாத்திக்கு நடுவில் வைத்து தரலாம்.
முட்டை - உருளை மசாலா: முட்டையை ஆம்லெட்டாகவும், வேக வைத்தும் மட்டுமே சாப்பிட்ட குழந்தைகள், இந்த புதுவகை டிஷ்ஷை விரும்பி சாப்பிடுவர். உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரி இருப்பதால், புரதமும் கலோரியும் முழுமையாகக் கிடைத்துவிடும்.
Post a Comment