உள்ளம் கேட்குமே....கேரட்-வேர்க்கடலை ரெய்தா
கேரட் - வேர்க்கடலை ரெய்தா தேவையானவை: துருவிய கேரட் அரை கப், வேர்க்கடலை கால் கப் (வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும்), பூண்டு ஒரு பல், பச்சைமி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_532.html?m=0
கேரட்-வேர்க்கடலை ரெய்தா
தேவையானவை: துருவிய கேரட் அரை கப், வேர்க்கடலை கால் கப் (வறுத்து கரகரப்பாகப் பொடிக்கவும்), பூண்டு ஒரு பல், பச்சைமிளகாய் 1, தயிர் ஒரு கப், சர்க்கரை அரை டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை: பச்சைமிளகாய், பூண்டு இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தயிரை கடைந்து, அதில் பூண்டு மிளகாய் விழுது, துருவிய கேரட், பொடித்த வேர்க்கடலை, சர்க்கரை, உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். பக்கோடா, வெஜிடபிள் புலாவுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.
கேரட்வேர்க்கடலை ரெய்தா: பச்சைமிளகாய்க்கு பதில் மிளகுத்தூள் சேர்த்துச் செய்தால் மணம் ஊரையே கூட்டும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment