சமையல் குறிப்புகள்! கதம்ப கூட்டுக்கறி
கதம்ப கூட்டுக்கறி தேவையான பொருட்கள்: ஊறவைத்து வேக வைத்த கடலைப் பருப்பு-1 கப், சேனை-200 கிராம், வெள்ளைப்பூசணி-200 கிராம், வாழைக்காய்-1, மஞ்ச...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_2305.html?m=0
கதம்ப கூட்டுக்கறி
தேவையான பொருட்கள்: ஊறவைத்து வேக வைத்த கடலைப் பருப்பு-1 கப், சேனை-200 கிராம், வெள்ளைப்பூசணி-200 கிராம், வாழைக்காய்-1, மஞ்சள் பூசணி-100 கிராம், தனியா-2 டீஸ்பூன், மிளகு- : ½ டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-4, உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன், மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய்-தலா 1 டீஸ்பூன், உப்பு-சுவைக்கேற்ப, தேங்காய் -சிறிதளவு.
செய்முறை: எல்லா காய்கறிகளையும் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். மிளகு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் வறுத்து அரைக்கவும். வெந்த காய்கறி, கடலைப் பருப்பு, அரைத்த மசாலா எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதில் கடுகு, உளுந்தம் பருப்பு, தேங்காய்ப் பல் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
Post a Comment