ஆரோக்கிய சமையல்! வெஜிடபிள் - எக் ஆம்லெட்
வெஜிடபிள் - எக் ஆம்லெட் தேவையானவை: முட்டை - 2, துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்ந்த கலவை - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்த...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_3573.html?m=0
வெஜிடபிள் - எக் ஆம்லெட்
தேவையானவை: முட்டை - 2, துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்ந்த கலவை - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை பொடி - 2 டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நெய் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லை காயவைத்து கரைத்த மாவை சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் நெய் விடவும். மறுபுறம் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும்.
வெஜிடபிள் - எக் ஆம்லெட்: வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும் நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
Post a Comment