சமையல் குறிப்புகள்! கொங்கு தக்காளி ரசம்
தேவையான பொருள்கள் : எண்ணெய் - 25 மில்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 2 பிரியாணி −இலை - 1, மிளகு - 8, பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, பருப்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5081.html?m=0
தேவையான பொருள்கள் :
எண்ணெய் - 25 மில்லி,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 2
பிரியாணி −இலை - 1,
மிளகு - 8,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 3,
பருப்புப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பருப்புத் தண்ணீர் - 1 கப்,
மல்லித் தழை- சிறிது.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும். நன்றாகக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பின் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின் அதில், பருப்புப் பொடி மற்றும் பருப்புத் தண்ணீரைச் சேர்த்து மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும்.
இதில் பருப்புப் பொடி என்பது கடலைப் பருப்பை இலேசாக வறுத்து அரைத்து வைத்த பொடி. திடீர் ரசம் செய்ய இது கைவசம் இருப்பது நல்லது!
சூப் போலவும் அருந்தலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
கொதித்தபின் நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்தால், கொங்கு தக்காளி ரசம் தயார்.
Post a Comment