கலங்கடிக்கும் சர்க்கரை... கைகொடுக்கும் கம்பஞ்சோறு ! ---
கிச்சன் கிளினிக்! ‘செஃப்’ ஜேக்கப் ...
https://pettagum.blogspot.com/2013/06/blog-post_927.html?m=0
கிச்சன் கிளினிக்! |
‘செஃப்’ ஜேக்கப்
|
கலங்கடிக்கும் சர்க்கரை... கைகொடுக்கும் கம்பஞ்சோறு ! |
"தேவையே இல்லை..." என்றபடி ருசியான ரெசிபிகளை தந்துவரும் செஃப் ஜேக்கப், இந்த இதழிலும் தொடர்கிறார்...
ஓட்ஸ் - வீட் ரொட்டி
தேவையானவை:
ஓட்ஸ் மீல் மாவு, முழுகோதுமை மாவு - தலா 50 கிராம், பொடியாக நறுக்கிய
வெங்காயம் - 30 கிராம், கொத்த மல்லி - 15 முதல் 20 கிராம், இஞ்சி - 10
கிராம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான
அளவு.கொத்தமல்லி சட்னி, வெஜிடபிள் சாலட் போன்றவை இதற்கு சரியான சைட் டிஷ். இரவில் சாப்பிட மிகவும் ஏற்றது.
---------------------------------------------------------------------------------------------------------------
கம்பஞ்சோறு உருண்டை
தேவையானவை: நையப்
புடைத்த கம்பு - 150 கிராம், கரகரப்பாக பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன்,
சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், நசுக்கிய பூண்டு - 3 பல், உப்பு, நீர்மோர் -
தேவையான அளவு.-------------------------------------------------------------------------------------------------------------
ஓட்ஸ் மீல் உப்புமா
தேவையானவை:
ஓட்ஸ் மீல் - 100 கிராம், வெங்காயம் - 25 கிராம், தக்காளி - 20 கிராம்,
கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு -
தலா கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.செஃப் ஜேக்கப் தந்துள்ள ரெசிபியில் சொல்லப்பட்டுள்ள அளவுகள், ஒரு வேளை உணவு தயாரிப்பதற்கானவை. இதில் சொல்லப்பட்டுள்ளபடி தயாரித்துச் சாப்பிடலாம்.
இந்த ரெசிப்பிகள் பற்றி 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி பேசுகிறார்...
"ஓட்ஸ் - வீட் ரொட்டி: சர்க்கரை நோயாளிகளுக்கு இரவு நேரங்களில் 500 முதல் 550 கிலோ கலோரி எனர்ஜி தேவை. இந்த ரொட்டியில் 78 கிராம் மாவுச்சத்து, 15.5. கிராம் புரதம், 19.5 கிராம் கொழுப்பு ஆகியவை இருப்பதால் 550 கிலோ கலோரி எனர்ஜி கிடைக்கிறது. இரவில் இதைச் சாப்பிட்டால் காலை 6 மணி வரை பசியே எடுக்காது, மிகவும் மெதுவாகத்தான் சர்க்கரை கூடும்.
செஃப் சொல்லியிருக்கும் கம்பு உள்ளிட்டவற்றின் அளவுகளை வைத்துக் கணக்கிட்டால், மொத்தம் ஆறு கம்பஞ்சோறு உருண்டைகள் தயாரிக்கலாம். ஓர் இரவு வேளைக்கு இது போதுமான உணவு.
இதில், 101 கிராம் மாவுச்சத்து, 17.5 கிராம் புரதம், 7.5 கிராம் கொழுப்பு, 12 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. இதனால் 541 கிலோ கலோரி எனர்ஜி கிடைக்கும்.
ஓட்ஸ் மீல் உப்புமா: இதுவும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய அட்டகாசமான உணவுதான்.
72 கிராம் மாவுச்சத்து, 16 கிராம் புரதம், 18 கிராம் கொழுப்பு இருக்கிறது. இதன் மூலம், 540 கிலோ கலோரி எனர்ஜி கிடைக்கும்."
Post a Comment