தேவையான பொருட்கள் : சேப்பங்கிழங்கு - கால் கிலோ, வேர்க்கடலை - 50 கிராம் (பொடிக்கவும்), கடலை மாவு - 2 மேஜைக்கரண்டி, மிளகாய்த் தூள் - ஒரு தேக...
சேப்பங்கிழங்கு - கால் கிலோ, வேர்க்கடலை - 50 கிராம் (பொடிக்கவும்), கடலை மாவு - 2 மேஜைக்கரண்டி, மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி, கொத்தமல்லி, புதினா - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்), ஆம்ச்சூர் பொடி - ஒரு சிட்டிகை, முந்திரி - 4 (பொடிக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து நன்கு மசிக்கவும். மசித்த சேப்பங்கிழங்குடன் பொடித்த வேர்க்கடலை, முந்திரி, உப்பு, கடலை மாவு, மிளகாய்த்தூள், ஆம்ச்சூர் பொடி, நறுக்கிய கொத்தமல்லி, புதினா தழைகளை சேர்த்து, நன்கு பிசையவும். இதை குட்டி, குட்டி உருண்டைகளாக்கி, சூடான எண்ணெயில் பொரிக்க, படு டேஸ்டான சேப்பங்கிழங்கு போண்டா ரெடி. புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
Post a Comment