பிரான் ( இறால்) சேமியா பிரியாணி --சமையல் குறிப்புகள்
பிரான் சேமியா பிரியாணி தேவையான பொருட்கள் இறால் = கால் கிலோ சேமியா = கால் கிலோ உருளை கிழங்கு = 1 (சிறியது) கேரட் = 1 (சிறியது) பட்டாணி = ஒர...
https://pettagum.blogspot.com/2011/12/blog-post_656.html?m=0
பிரான் சேமியா பிரியாணி
தேவையான பொருட்கள்
இறால் = கால் கிலோ
சேமியா = கால் கிலோ
உருளை கிழங்கு = 1 (சிறியது)
கேரட் = 1 (சிறியது)
பட்டாணி = ஒரு மேசை கரண்டி
சோளம் = ஒரு மேசைகரண்டி (புரோஷன்)
பீன்ஸ் = ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் = இரண்டு
தக்காளி = இரண்டு
கொத்து மல்லி தழை = சிறிது
புதினா = சிறிது
எண்ணை = முன்று மேசைகரண்டி
நெய் (அ) டால்டா) = ஒரு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
பச்ச மிளகாய் = ஒன்று
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் = ஒரு பின்ச்
உப்பு = தேவைக்கு
பட்டை = அரை அங்குல அளவு
ஏலம் = ஒன்று
கிராம்பு = இரண்டு
செய்முறை
இறாலை சுத்தம் செய்து வயிற்றிலும்,முதுகிலும் உள்ள அழுக்கை கீறி எடுத்து விட்டு அரைதேக்கரண்டி வினிகர் ஊற்றி இரண்டு நிமிடம் ஊறவைத்து கழுவி தண்ணீரைவடித்து வைக்கவும்.
சேமியாவை நெய் (அ) டால்டா ஒரு தேக்கரண்டி சேர்த்து கரியாமல் சிவற வருத்து வைக்கவும்.
காய் கறிகளை நன்கு கழுவி அரிந்து வைக்கவும்.
சட்டியை காயவைத்து எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு, ஏலம் போட்டு வெடிய விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பெஸ்ட் போட்டு பச்சை வாடை போகும் வதக்கவும்.
கொத்து மல்லி, புதினா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
தக்காளியை பொடியாக நருக்கி சேர்த்து, பச்சமிளகாயும் போட்டு தீயின் அனலை சிம்மில் வைத்து வேக விடவும்.
தக்காளி மசிந்ததும் இறால், அரிந்து வைத்திருகும் காய்கள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் காய், மற்றும் இறால் வெந்து நல்ல கூட்டு போல் எண்ணை தெளிந்து மேலே வரும், தீயை சிம்மிலேயே வைக்கவும்.
வெந்ததும் சேமியா ஒன்றுக்கு ஒன்னறை பங்கு தண்னீர் ஊற்றி கொதிக்க விட்டு சேமியாவை போட்டு அடி பிடிக்காமல் கிளறி கொஞ்சமா இருக்கும் போது அடுப்பை அனைத்து விடவேண்டும்.அந்த சூட்டிலீயே இருக்கி தம் ஆகிவிடும்.
புதினா சட்னி, நார்த்தங்காய் ஊறுகாய், இஞ்சி டீயும்.தொட்டுக்க நல்ல இருக்கும்.
Post a Comment