வினிகர் சமைக்க மட்டுமில்லை--வீட்டுக்குறிப்புக்கள்
வினிகர் சமைக்க மட்டுமில்லை ஜன்னல் பளபளக்க: ஒரு லிட்டர் தண்ணீரில் 1டம்ளர் வினிகர் ஊற்றி ஜன்னல் கம்பிகளை துடைத்துவிட்டு ஒரு பேப்பர் ...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_3664.html?m=0
வினிகர் சமைக்க மட்டுமில்லை
ஜன்னல் பளபளக்க:
ஒரு லிட்டர் தண்ணீரில் 1டம்ளர் வினிகர் ஊற்றி ஜன்னல் கம்பிகளை துடைத்துவிட்டு ஒரு பேப்பர் கொண்டு துடைக்கவும்.
பாத்திரம் கழுவும்போது:
எதாவது பாட்டிலில் பாதியளவு தண்ணீர், பாதியளவு வினிகர் கலந்து பாத்திரம் கழுவ்வ பயன்படுத்தவும்.
குக்கரில் துர்நாற்றதை போக்க:
டம்ளர். குக்கர், பிளஸ்க் கறையாகவும், துர்நாற்றம் அடிக்கும் இதை போக்க வினிகர் கலந்து கழுவவும்.
பித்தாளை பாத்திரங்கள் பளபளக்க:
ஒரு பங்கு வினிகர் 5பங்கு தண்ணீர் கலந்து சுத்தம் செய்யவும்.
பெயின்ட் கரை போக்க:
கண்ணாடிகளின் உள்ள பெயிண்டை போக்க சூடான வினிகர் கலந்து துடைக்கவும்.
மைக்ரோ ஓவனின் வாடை போக்க:
இறைச்சி செய்த பின்பு வரும் வாடையினை போக்க ஒரு கப்பில் சிறிது வினிகர் ஊற்றி 1 நிமிடம் ஹையில் வைத்து ஆப் செய்யவும்.
தரை பளபளக்க:
வீட்டின் தரைகளை சுத்தபடுத்தும் போது வினிகர் கலந்து துடைக்கவும்,
கேஸ் ஸ்ட்வ்வை சுத்தம் செய்ய
வினிக்ரை துணியில் ஊற்றி துடைக்கவும்.
Post a Comment