இறால் குருமா--சமையல் குறிப்பு
இறால் குருமா தேவையான பொருட்கள் இறால் - 1/4 கிலோ சாம்பார் வெங்காயம், தக்காளி - 100 கிராம் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - 4 பல் மிளகாய்த் தூள...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_2155.html?m=0
இறால் குருமா
தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம், தக்காளி - 100 கிராம்
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய் - 1/4 மூடி
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - சிறிதளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 குழிக்கரண்டி
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி கொள்ளவும். மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
* தேங்காய், இஞ்சி, பூண்டு, கசகசாவை அரைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* வெங்காயத்தை வதக்கவும். வதக்கிய வெங்காயத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
* தேவையான அளவு உப்பு, நீர் சேர்த்து மசாலா முறிந்ததும் இறாலைப் போட்டு வெந்ததும் இறக்கிவிடவும்.
*****************************************************************
Post a Comment