ரசிக்க.. ருசிக்க! தால்&சேமியா கட்லெட்
தேவையானவை: சேமியா & அரை கப், கடலைப்-பருப்பு & அரை கப், பொட்டுக்கடலை & கால் கப், உருளைக்கிழங்கு & 4, பெரிய வெங்காயம் & 2...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post.html?m=0
தேவையானவை: சேமியா & அரை கப், கடலைப்-பருப்பு & அரை கப், பொட்டுக்கடலை & கால் கப், உருளைக்கிழங்கு & 4, பெரிய வெங்காயம் & 2, பச்சைமிளகாய் & 4, இஞ்சி & ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் & தலா தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை & தலா சிறிதளவு.
செய்முறை: சேமியாவை அரை டீஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து, போதிய அளவு தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கிக்கொள்ளவும். கடலைப்-பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். சேமியா, உருளைக்கிழங்கு, அரைத்த கலவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். தோசைக்கல்லை காயவைத்து கலவையை கட்லெட் வடிவில் தட்டி, எண்ணெய் விட்டு இருபுறமும் சிவக்க வேகவிட்டு எடுக்கவும். மிகவும் ருசியான சிற்றுண்டி; சத்தானதும்கூட.
தால்&சேமியா கட்லெட்: எல்லாம் சேர்த்து சற்று தளர்த்தியாக இருந்தால் சிறிது ரஸ்க் தூளை கலந்து தட்டிக்கொள்ளலாம்.
----------------------------------------------------------------------------
Post a Comment