அசத்தல் சமையல்! முந்திரி ரவா இட்லி
முந்திரி ரவா இட்லி தேவையானவை: ரவை - அரை கப், எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், தண்ணீர் - அரை கப் (தேவைக்கேற்ப கூட்டியோ குறைத...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5139.html?m=0
முந்திரி ரவா இட்லி
தேவையானவை: ரவை - அரை கப், எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், தயிர் - ஒரு கப், தண்ணீர் - அரை கப் (தேவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம்), சமையல் சோடா - அரை டீஸ்பூன், உப்பு - முக்கால் டீஸ்பூன், தக்காளி (கெட்டியானது) - 1, முந்திரிப்பருப்பு - 4 அல்லது 5, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: தக்காளியை 8 சிறு துண்டுகளாக நறுக்குங்கள். முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக ஒடித்துக்கொள்ளுங்கள். மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, ஒரு நிமிடம் மைக்ரோஹையில் சூடுசெய்து, பிறகு ரவையைப் போட்டு 2 நிமிடம் வைக்கவும். வெளியே எடுத்து, கிளறிவிடவும். பிறகு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம் ஆறட்டும். நன்றாக ஆறின பிறகு, சமையல் சோடா, தயிர், (தேவையானால் தண்ணீர்) இரண்டையும் ரவையில் சேர்த்து இட்லி மாவு போல கலக்கவும். 10 நிமிடம் இது ஊறட்டும். சிறிய மைக்ரோ ப்ரூஃப் கிண்ணங்களில், ஒவ்வொன்றிலும் ஒரு தக்காளி துண்டு, சிறிது முந்திரி துண்டுகள், சிறிது கறிவேப்பிலை போட்டு, அதன் மேலே 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் ரவை கலவையை வைக்கவும். இந்தக் கிண்ணங்களை மைக்ரோவேவ் அவனில், வளையம் போல வட்டமாக வைத்து, மைக்ரோஹையில் மூன்றரை நிமிடம் வைக்கவும்.
மூன்றரை நிமிடம் ஆனபிறகு ‘அவன்’&ஐ ஆஃப் செய்து விட்டு, 5 நிமிடம் அதிலேயே இருக்க விடவும். பிறகு வெளியே எடுத்து, சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும். சூடாக, சுவையாக கமகமக்கும் இந்த இட்லி.
Post a Comment