தென்னிந்திய சமையல்! ஆந்திரா சௌ சௌ பச்சடி
தேவையானவை: சௌசௌ & 1 சிறியதாக, தேங்காய் துருவல் & 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் & 4 அல்லது 5, புளி & நெல்லிக்காயளவு, வெங்காயம...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_9517.html?m=0
தேவையானவை: சௌசௌ & 1 சிறியதாக, தேங்காய் துருவல் & 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் & 4 அல்லது 5, புளி & நெல்லிக்காயளவு, வெங்காயம் & பாதி, பூண்டு & 3 பல், மல்லித்தழை & சிறிது, உப்பு & தேவைக்கு.
தாளிக்க: கடுகு & அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & 1 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் & 1, எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை: சௌசௌவை நன்கு கழுவி இரண்டாக நறுக்கி, விதை நீக்கி மெல்லியதாக நறுக்கவும். (தோலுடன்) எண்ணெயை காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து பொன் நிறமானதும் சௌசௌ முதல் உப்பு வரை எல்லாவற்றையும் சேர்த்து 10 நிமிடம் வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, விப்பர் பிளேடால் விட்டு, விட்டு அரைக்கவும். சற்று கரகரப்பாக அரைத்து எடுத்து பரிமாறவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடச் சுவையாக இருக்கும் இந்தக் கூட்டு.
Post a Comment