சமையல் குறிப்புகள்! ஓட்ஸ் கிரீம் கஞ்சி
தேவையானவை: ஓட்ஸ் - அரை கப், பால் - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், துருவிய கொப்பரை - ஒரு டேபிள்ஸ்பூன், கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லத்தூ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_1383.html?m=0
தேவையானவை: ஓட்ஸ் - அரை கப், பால் - ஒரு கப், தண்ணீர் - ஒன்றரை கப், துருவிய கொப்பரை - ஒரு டேபிள்ஸ்பூன், கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் அல்லது சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், சாரைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெறும் கடாயில் கொப்பரைத் துருவலை போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும். பாலுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் ஓட்ஸை வேகவிடவும். அதனுடன் கொப்பரை, வெல்லத்தூள் அல்லது சர்க்கரை சேர்த்துக் கலக்கி இறக்கிவைத்து கிரீம் சேர்க்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.
கிரீமுக்கு பதில் சிறிது மில்க்மெய்ட் சேர்க்கலாம். இதில் சாரைப்பருப்பையும் நெய்யில் வறுத்துப் போட, குழந்தைகள் இன்னும் விரும்பி சாப்பிடுவர். சுவையான சத்தான இந்த கஞ்சி வெயிலுக்கு ஏற்றது.
Post a Comment