சமையல் குறிப்புகள்! கார்த்திகைப் பொரி உருண்டை
தேவையான பொருட்கள்:- அவல் பொரி-1 லிட்டர், வெல்லம்-அரை கிலோ, பொட்டுக்கடலை-1 கப், தேங்காய்-‘முற்றியது’ சிறு பல்லுப் பல்லாக நறுக்கியது-1 கப், ஏ...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8066.html?m=0
தேவையான பொருட்கள்:- அவல் பொரி-1 லிட்டர், வெல்லம்-அரை கிலோ, பொட்டுக்கடலை-1 கப், தேங்காய்-‘முற்றியது’ சிறு பல்லுப் பல்லாக நறுக்கியது-1 கப், ஏலக்காய்-5 , சுக்கு-1 துண்டு, அரிசிமாவு-1 கப், ஆயில்-2 ஸ்பூன்.
செய்முறை: வெல்லத்தைத் தூள் செய்து 1 கப் தண்ணீர் விட்டு வடிகட்டி எடுத்து திரும்ப அடுப்பில் வைத்துப் பாகு செய்ய வேண்டும். பாகு நன்கு வெந்தபின் எடுத்து, தண்ணீரில் போட்டால் கறையக்கூடாது, உருட்டிப் போட்டால், டங் என்ற சத்தத்துடன் விழுந்தால்தான் பதம் சரியானது. அந்தப் பாகில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு இறக்கி வைத்துக்கொண்டு அவல் பொரி,பொட்டுக்கடலை, தேங்காய், ஏலம், சுக்கு பவுடர் போட்டுக் கிளறி சிறிது நேரம் கழித்து அரிசி மாவைத் தொட்டுக் கொண்டு உருண்டை பிடிக்கவும். இல்லையென்றாலும் அப்படியே உதிரியாகவும் வைக்கலாம்.
Post a Comment