கபசுரத்துக்கு சித்தாவில் தீர்வு! சித்த மருத்துவம் சிறப்பான் தீர்வு !!
ம ழை மற்றும் குளிர் காலங்களில் மக்களை, அதிகப் பாதிப்புக்கு உள்ளாக்குவது ஃப்ளூ காய்ச்சல் என்கிற 'கபசுரம்’....
https://pettagum.blogspot.com/2013/12/blog-post_3835.html?m=0
மழை மற்றும்
குளிர் காலங்களில் மக்களை, அதிகப் பாதிப்புக்கு உள்ளாக்குவது ஃப்ளூ
காய்ச்சல் என்கிற 'கபசுரம்’. இது ஒரு வகை வைரஸ் மூலம் சுவாசப் பாதையில்
உண்டாகும் தொற்று நோய்.
அறிகுறிகள்:
காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தும்மல், தலைவலி, உடல்வலி.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
உணவு சேர்க்க வேண்டியவை:
தேன், பால் நீக்கப்பட்ட தேநீர், இஞ்சி, பூண்டு, பனங்கற்கண்டு, முளைக்கீரை, காய்கறிகள்.
தவிர்க்க வேண்டியவை:
வாழைப்பழம், திராட்சை, புளி, தக்காளி, பால், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், குளிரூட்டப்பட்ட அறை.

Post a Comment