கம்பு ராகி 'மேதி’ சப்பாத்தி--சிறுதானிய சமையல்!!
சிறுதானிய சமையல் ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பா...
https://pettagum.blogspot.com/2013/12/blog-post_2961.html?m=0
சிறுதானிய சமையல்
ஒரு காலத்தில் சிறுதானியங்கள் மட்டுமே இங்கே பெரும் உணவாக இருந்தன. இன்றைக்கோ... சிற்றுண்டியாகக்கூட சிறுதானியங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. அரிசி சாப்பிடுவதுதான் கௌரவம் என்கிற நினைப்பில், ஏழைகள்கூட சிறுதானியங் களை மறக்க ஆரம்பித்ததுதான்... இன்றைக்கு ஏழை, பணக்காரர் என்று அனைவருக்குமே பலவித நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிட்டிருக்கிறது. இத்தகையச் சூழலில், சிறுதானியங்களை, நவீனச் சூழலுக்கு ஏற்ப, நாவுக்கு ருசியாக சமைத்துச் சாப்பிடுவதற்கு வழிகாட்ட வருகிறது... இந்த சமையல் பகுதி!
இந்த இதழில் பரிமாறுபவர்... சுதா செல்வகுமார்
கம்பு ராகி 'மேதி’ சப்பாத்தி
தேவையான பொருட்கள்
செய்முறை:
அனைத்து மாவுடன் உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைத்து, சப்பாத்தியாக இடவும். தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி, சப்பாத்தியைப் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.

Post a Comment