கறிவேப்பிலை சிக்கன் வறுவல்---சமையல் குறிப்புகள்,
கறிவேப்பிலை சிக்கன் வறுவல் தேவையான பொருட்கள்: சிக்கன் (பொடிப் பொடியாக நறுக்கியது) - 250 கிராம், இஞ்சி பேஸ்ட் - 20 கிராம், மிளகாய்த்தூள...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_8964.html?m=0
கறிவேப்பிலை சிக்கன் வறுவல்
தேவையான பொருட்கள்: சிக்கன் (பொடிப் பொடியாக நறுக்கியது) - 250 கிராம், இஞ்சி பேஸ்ட் - 20 கிராம், மிளகாய்த்தூள் - 20 கிராம், கடலை மாவு - 60 கிராம், பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 50 கிராம், பச்சை மிளகாய் - 2 (விழுதாக அரைக்கவும்), முட்டை - 1, கறிவேப்பிலை - ஒரு கொத்து, சோம்பு - கால் டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - 2, எண்ணெய்- 250 மில்லி, உப்பு -தேவையான அளவு.
செய்முறை: சிக்கன், இஞ்சி பேஸ்ட், மிளகாய்த்தூள், கொஞ்சம் உப்பு மற்றும் கடலை மாவு அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலக்கி, அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய சிக்கனை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இனி, மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய் விழுது, முட்டையின் வெள்ளைக்கரு, பொரித்த சிக்கன் சேர்த்து வதக்கி எடுத்தால்... டிஷ் ரெடி. வட்டமாக வெட்டிய வெங்காயம், எலுமிச்சம் பழத்தை வைத்து டெகரேட் செய்து பரிமாறினால்... அழகாக இருக்கும்
Post a Comment