பப்பு ரொட்டை ரெசிபி---சமையல் குறிப்புகள்,
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், வேகவைத்த துவரம்பருப்பு - பாசிப்பருப்பு கலவை - அரை கப், பச்சை மிளகாய் - 6, தேங்காய் த...
https://pettagum.blogspot.com/2012/08/blog-post_6139.html?m=0
தேவையானவை: பச்சரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், வேகவைத்த துவரம்பருப்பு - பாசிப்பருப்பு கலவை - அரை கப், பச்சை மிளகாய் - 6, தேங்காய் துருவல் அரை கப், எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உடைத்த முந்திரிப்பருப்பு - 10, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசியை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அதில் சிறிது சுடுநீர் கலந்து, உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ரவா தோசை போல மெல்லிய தோசைகளாக வார்க்கவும். தோசைகளை துண்டுகளாக 'கட்’ செய்யவும்.
வாணலியில் எண்ணெயை காய வைத்து... கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரித் துண்டுகள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து... வேக வைத்த பருப்புக் கலவை, சிறிது தேங்காய் துருவல், எலுமிச்சைச் சாறு, உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்துக் கலக்கவும். கெட்டியானதும், 'கட்’ செய்த தோசைத் துண்டுகளை சேர்த்துக் கலக்கவும். சூடாகப் பரிமாறவும்
குறிப்பு: தோசைத் துண்டுகளுடன் பால், சர்க்கரை சேர்த்து இனிப்பு 'டிஷ்’ ஆகவும், புளியோதரை பேஸ்ட் (புளிக் காய்ச்சல்) சேர்த்து புளி தோசையாகவும் செய்யலாம். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கி, தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கி... தோசைத் துண்டுகளை சேர்த்து ஸ்பைசி 'டிஷ்’ ஆகவும் செய்து பரிமாறலாம்
Post a Comment