உடலுக்கு வலிவு தரும் சூப்கள்-வில்வ சூப்
வில்வம் இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_4475.html?m=0
வில்வம்
இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.
வில்வ சூப்
தேவை
வில்வ இலை - 1 கப்
(அ) பொடி 15 கிராம் - 3 டீஸ்பூன்
தக்காளி - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிது
இஞ்சி, பூண்டு - சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கம்பு மாவு - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் பிறவெட்டிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறுமுன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
---------------------------------------------------------------------
Post a Comment