விஷக்கடி-பாம்பு-தேள்-பூரான்-எலி-தேனீ---பாட்டி வைத்தியம்,!
விஷம் இல்லா பாம்பு கடித்தால் முற்றிய வாழை மரத்தின் அடி வாழைத் தண்டின் சாறு எடுத்து அத்துடன் தும்பை இலைச்சாறு சம அளவு எடுத்து இரண்டையும் ஒன்...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_1259.html?m=0
விஷம் இல்லா பாம்பு கடித்தால்
முற்றிய வாழை மரத்தின் அடி வாழைத் தண்டின் சாறு எடுத்து அத்துடன் தும்பை இலைச்சாறு சம அளவு எடுத்து இரண்டையும் ஒன்றாக கலக்கி தினமும் ஒரு வேளை உள்ளுக்கு கொடுத்தால் விஷம் முறியும்.
---------------------------------------------------------------
விஷக்கடி
ஒரு கையளவு கரிசலாங்கண்ணிஇலையை எடுத்து சாறு பிழிந்து மோருடன் கலந்து காலை மாலை இரு வேளை பருகவும்.
-------------------------------------------------------------
தேள் கொட்டினால்
தும்பை இலையை அரைத்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு உள்ளுக்கு கொடுத்து தேள் கொட்டிய இடத்தில் வைத்து கட்டி வர தேளின் விஷம் குறையும்.
பிரமத்தண்டு இலையின் சாறை தேள் கொட்டின இடத்தில் விட்டு சூடேற தேய்த்து கொண்டே இருந்தால் தேளின் விஷம் குறையும்.
புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து கசக்கி தேள் கொட்டி இடத்தில் வைத்து கட்ட தேளின் விஷம் குறையும்.
சுண்ணாம்புடன் கொஞ்சம் உப்பு சேர்த்து நசுக்கி தேள் கொட்டின இடத்தில் வைத்து தடவ தேளின்
விஷம் குறையும்.
20 மிளகை எடுத்து ஒவ்வொன்றாக மென்று விழுங்கினால் விஷம் இறங்கும்.
புளியையும், சுண்ணாம்பையும் எடுத்து உள்ளங்கையில் வைத்து பிசைந்து தேள் கொட்டிய இடத்தில் வைத்து கட்டவும். பின்னர் மிளகு, வெற்றிலை, தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை மென்று சாப்பிடவும். தேள் விஷம் உடனே இறங்கும்.
நாயுருவி வேரைப் பச்சையாக மென்று, அதன் சாற்றை மட்டும் உட்கொள்ள விஷம் இறங்கும்.
மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து தடவினால் தேள் கொட்டின இடத்தில் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்.
சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
சிறிது எலுமிச்சம்பழத்தின் விதையை எடுத்து அதனுடன் சிறிது உப்பையும் சேர்த்து நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து குடித்தால் தேளி்ன் விஷம் குறையும்.
சிறிதளவு வெங்காயத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி தேள் கொட்டிய இடத்தில் அதில் ஒரு பகுதியை வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.
நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொண்டால் தேள்கடி விஷம் நீங்கும். சிறிய தேள் கடி (வீடுகளில் காணப்படும் தேள்)
-------------------------------------------------------------
பூரான் கடிக்கு
பூரான் கடித்த இடத்தில் தும்பை சாறு பூசி வர வலி குறையும்.
பூரான் கடித்த இடத்தில் குப்பைமேனி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பத்து போட விஷக்கடி குணமாகும்.
--------------------------------------------------------
பெருச்சாளி கடியினால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுக்கு
மரவள்ளிக்கிழங்கை தேனில் குழைத்து ஒருநாள் இரு வேளை வீதம் தொடர்ந்து 48 நாள் சாப்பிடக் குணமாகும்.
எலிக்கடி விஷம் குறைய
விளாமரத்தின் பூக்களை சுத்தம் செய்து 1 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி சாப்பிட எலிக்கடி விஷம் குறையும்.
குப்பைமேனி இலையை மைய அரைத்து கடிவாயில் தினமும் காலை மாலை இரண்டு நேரமும் பூச வேண்டும்.
----------------------------------------------------
தேனீ கொட்டினால்
மாங்காய் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை தேனி கொட்டிய இடத்தில் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும்.
சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து தேனீ கொட்டிய இடத்தில் போட்டால் சிறிது நேரத்தில் வலி நின்று விடும்.
--------------------------------------------------------------
Post a Comment