அசத்தல் சுவையில் நண்டு புளிக்குழம்பு!
நண்டு புளிக்குழம்பு தேவையான பொருட்கள் நண்டு - 1/2 கிலோ புளி - எலுமிச்சம் பழ அளவு மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் தனியாத் தூள் - 3 டீஸ்பூன் மஞ...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_9845.html?m=0
நண்டு புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்
நண்டு - 1/2 கிலோ
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
தனியாத் தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
* நண்டை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
* புளியைக் கரைத்து அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், போதுமான அளவு உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
* அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், தக்காளி இவற்றை வதக்கவும்.
* பிறகு புளிக்கரைசல், மசாலாவை சேர்த்து கொதிக்க விடவும்.
* மேற்கண்ட கலவை கொதித்ததும் நண்டை சேர்த்து குழம்பு கெட்டியாக வந்ததும், இறக்கி விடவும்.
* ருசிக்க சுவையான நண்டு புளிக் குழம்பு தயார்.
Post a Comment