மலேசியா சமையல்! நாஸி கொரெய்ங்
நாஸி கொரெய்ங் தேவையானவை: நூடுல்ஸ் - 2 பாக்கெட், தொஃபு (சோயா பனீர்) - ஒரு பாக்கெட், பெரிய வெங்காயம் - 2, வெங்காயத்தாள் - 3 இதழ், முளைப்பயறு...
https://pettagum.blogspot.com/2011/05/blog-post_7479.html?m=0
நாஸி கொரெய்ங்
தேவையானவை: நூடுல்ஸ் - 2 பாக்கெட், தொஃபு (சோயா பனீர்) - ஒரு பாக்கெட், பெரிய வெங்காயம் - 2, வெங்காயத்தாள் - 3 இதழ், முளைப்பயறு - 2 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 8 + பூண்டு - 4 பல் சேர்த்து அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் (பொரிக்க) - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்கவைத்து, நூடுல்ஸைப் போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, நீரை வடித்து, பச்சை தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ளுங்கள்.
தொஃபுவை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி, எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். எண்ணெயை காயவைத்து, அரைத்த மிளகாய் விழுதைச் சேர்த்து, சற்றுப் பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் நூடுல்ஸ், சோயா சாஸ், பொரித்த தொஃபு, வெங்காயத்தாள் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறி இறக்குங்கள்.
(இந்த டிஷ்ஷ§க்கு அரை டீஸ்பூன் ‘அஜினோமோட்டோ’ சேர்ப்பது மலேசியர்களின் வழக்கம்).
Post a Comment