சமையல் குறிப்புகள்! கோழி வடை
கோழி வடை தேவையான பொருட்கள்: 250 கிராம் கோழிக்கறி, 100 கிராம் கடலை பருப்பு, 50 கிராம துவரம் பருப்பு, 2 வெங்காயம், 6 பச்சை மிளகாய், கைப்பிட...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_2920.html?m=0
கோழி வடை
தேவையான பொருட்கள்:
250 கிராம் கோழிக்கறி, 100 கிராம் கடலை பருப்பு, 50 கிராம துவரம் பருப்பு, 2 வெங்காயம், 6 பச்சை மிளகாய், கைப்பிடியளவு முருங்கை கீரை, 1 மேசைக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய்
செய்முறை:
கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து வைக்கவும். எலும்பில்லாத கோழிக்கறியை அஜித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.முருங்கைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
கோழிக்கறி, கீரை, பருப்பு, இஞ்சி விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து வடைகளாக தட்டி இலையில் வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், வடைகளைப் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
Post a Comment