சமையல் குறிப்புகள்! கேரட் வடை
கேரட் வடை தேவையானப் பொருட்கள் * துருவிய கேரட் - ஒரு கப் * கடலை மாவு - 2 ஸ்பூன் * மைதா - ஒரு ஸ்பூன் * கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன் * இஞ்சி,ப...
https://pettagum.blogspot.com/2011/04/blog-post_25.html?m=0
கேரட் வடை
தேவையானப் பொருட்கள்
* துருவிய கேரட் - ஒரு கப்
* கடலை மாவு - 2 ஸ்பூன்
* மைதா - ஒரு ஸ்பூன்
* கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்
* இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
* பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
* பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
* பொடியாக நறுக்கிய புதினா - 1/2 கப்
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்
* பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 1/4 கப்
* உப்பு - 1/2 ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப
* எண்ணெய் - 1 1/2 கப் (பொரித்து எடுக்க)
கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டையாக எடுத்து வடைகளாக தட்டி போடவும்.
வடை இருபுறமும் வெந்து பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
Post a Comment