வாசகிகள் கைமணம்! வேப்பம் பூ ரசம்--கதம்ப கூட்டுக்கறி
வேப்பம் பூ ரசம் தேவையான பொருட்கள்: நிழலில் காய வைத்த வேப்பம் பூ-1 கைப்பிடி, தனியா, துவரம் பருப்பு-தலா 1 மேஜைக்கரண்டி, காய்ந்த மிளகாய்-8, ப...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_8383.html?m=0
வேப்பம் பூ ரசம்
தேவையான பொருட்கள்: நிழலில் காய வைத்த வேப்பம் பூ-1 கைப்பிடி, தனியா, துவரம் பருப்பு-தலா 1 மேஜைக்கரண்டி, காய்ந்த மிளகாய்-8, பெருங்காயத்தூள்- ½ டீஸ்பூன், எண்ணெய்-1 மேஜைக்கரண்டி, கடுகு-½ டீஸ்பூன், நெய்-2 டீஸ்பூன், புளி-ஒரு எலுமிச்சை அளவு, உப்பு-சுவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் எண்ணெய் சூடானதும், தனியா, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, புளி சேர்த்து சிம்மில் கொதிக்க விடவும். இதில் நெய்யில் கடுகு தாளித்து, வேப்பம் பூவை சிவக்க வறுத்துப் போட்டு கீழே இறக்கி வைக்கவும்.
-------------------------------------------------------------------------------------------------
கதம்ப கூட்டுக்கறி
தேவையான பொருட்கள்: ஊறவைத்து வேக வைத்த கடலைப் பருப்பு-1 கப், சேனை-200 கிராம், வெள்ளைப்பூசணி-200 கிராம், வாழைக்காய்-1, மஞ்சள் பூசணி-100 கிராம், தனியா-2 டீஸ்பூன், மிளகு-: ½ டீஸ்பூன், காய்ந்த மிளகாய்-4, உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன், மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய்-தலா 1 டீஸ்பூன், உப்பு-சுவைக்கேற்ப, தேங்காய் -சிறிதளவு.
செய்முறை: எல்லா காய்கறிகளையும் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். மிளகு, தனியா, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் வறுத்து அரைக்கவும். வெந்த காய்கறி, கடலைப் பருப்பு, அரைத்த மசாலா எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதில் கடுகு, உளுந்தம் பருப்பு, தேங்காய்ப் பல் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
Post a Comment