அள்ளும் சுவையில் கார அரிசி பிஸ்கட் !
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு, மைதா மாவு - தலா 4 டீஸ்பூன், எள்ளு, உளுத்த மாவு - தலா 2 டீஸ்பூன், நெய் (அ) வெண்ணெய் -...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_1642.html?m=0
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு, மைதா மாவு - தலா 4 டீஸ்பூன், எள்ளு, உளுத்த மாவு - தலா 2 டீஸ்பூன், நெய் (அ) வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவு, மைதா மாவு, உளுத்த மாவு மூன்றையும் லேசாக வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை மாவு, எள்ளு, உப்பு, மிளகாய்த்தூள், வெண்ணெய் (அ) நெய் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும். மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, மைதா மாவில் தொட்டு, சப்பாத்தி போல் இடவும். இதன்மேல் சிறிய டப்பாவின் மேல் மூடியை வைத்து அழுத்தி, சிறு சிறு வட்டங்களைப் போல் செய்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Post a Comment