சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க..!
சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க.. எம்.ராமகிருஷ்ணம ராஜூ, காது, மூக்கு, தொண்டை நிபுணர் பனிக்காலம் வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்ற...
https://pettagum.blogspot.com/2015/01/blog-post_40.html?m=0
சைனஸ் பிரச்னை தடுக்க... தவிர்க்க..
எம்.ராமகிருஷ்ணம ராஜூ, காது, மூக்கு, தொண்டை நிபுணர்
பனிக்காலம்
வந்தால், சிலருக்கு விடாத தலைவலி மற்றும் தும்மல் படுத்திஎடுத்துவிடும்.
தூசி இருக்கும் பகுதிக்குச் சென்றால், விடாது தும்மிக்கொண்டே இருப்பார்கள்.
கேட்டால், ''சைனஸ் பிரச்னைங்க, தீரவே இல்ல'' எனக் கவலையோடு சொல்வார்கள்.
சைனஸ் பிரச்னை ஏன் வருகிறது? அதை எப்படித் தவிர்ப்பது?
சைனஸ் என்றால் என்ன?
நமது மூக்கைச் சுற்றி, நான்கு காற்றுப் பைகள் உண்டு.
மூளை மூக்கு, கன்னம் மூக்கு, மூக்கு நெற்றி இணையும் இடம், கண்கள் மற்றும்
மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில் இந்த காற்றுப் பைகள் அமைந்திருக்கின்றன.
இந்த காற்றுப் பைகள், நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறிப்பிட்ட
வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன. இந்த காற்றுப்
பைகளே சைனஸ் பகுதி என அழைக்கப்படுகின்றன.
சைனஸ் பிரச்னை எப்படி வருகிறது?
சைனஸ் பகுதியில் ஒரு திரவம் சுரந்து, நமது மூக்கில்
உள்ள சளி சவ்வுக்கு ( Mucous membarane) வரும். இந்த சளி சவ்வுதான், நாம்
சுவாசிக்கும் வெப்பமான காற்றை ஈரபடுத்தி, சைனஸ் பகுதிக்கு அனுப்புகிறது.
சைனஸ் பகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், திரவம் காற்றுப் பையிலேயே
தங்கிவிடும். இதன் காரணமாக பல பாதிப்புகள் முகத்தில் ஏற்படக்கூடும். சைனஸ்
பகுதியில் ஏற்படும் இந்த பிரச்னைக்கு 'சைனசிட்டிஸ்’ (Sinusitis) என்று
பெயர். மூக்குத் துவாரத்தைப் பிரிக்கும் எலும்பு வளைவாக இருப்பதன்
காரணமாகவும், சைனஸ் பகுதிக்கு அருகில் இருக்கும் எலும்பின் முறையற்ற
வளர்ச்சியாலும், மூக்குப் பகுதிக்குள் 'பாலிப்’ (Polyp) எனப்படும் மூக்கு
சதை வளர்ச்சி காரணமாகவும், சைனஸ் பிரச்னை வருகிறது.
பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, அலர்ஜி காரணமாக சைனஸ் பிரச்னை வருகிறது.
சைனசிடிஸ் அறிகுறிகள் என்ன?
சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?
யூக்லிப்டஸ் எண்ணெயைக் கலந்து, நீராவி பிடிக்கலாம்,
தைலம் தடவலாம். தும்மலைத் தடுக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மாத்திரைகள்
எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரையின் பேரில், குறிப்பிட்ட
காலத்துக்கு ஸ்டீராய்டு கலந்த ஸ்ப்ரே பயன்படுத்தலாம். மருத்துவர்
பரிந்துரை இல்லாமல் ஸ்டீராய்டு கலந்த சொட்டு மருந்துகளை மூக்கினுள் விட
வேண்டாம்.
இந்த சிகிச்சைமுறைகளில் சரியாகவில்லை எனில்,
எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலமாக சைனஸ் பகுதியில் உள்ள திரவம்
அப்புறப்படுத்தப்படும். எலும்புப் பகுதி, சதைப் பகுதியில் பிரச்னை
இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம். ஆனால்,
உடனே பலன் இருக்காது. தொடர்ந்து, ஓரிரு வருடங்களுக்கு, மருத்துவர்
பரிந்துரைப்படி மாத்திரை மருந்துகளைச் சாப்பிடவேண்டும். சைனஸ் பிரச்னை
வருவதற்கான அறிகுறி அறிந்து, பிரச்னை பெரிதாகாமல் தடுப்பதே
புத்திசாலித்தனம்.
சைனஸ் பிரச்னைக்கு எளிய டிப்ஸ்!

Post a Comment