இனியெல்லாம் ருசியே! சந்தேகங்களும்... தீர்வுகளும்
எ ன்னதான் சிரமம் எடுத்துக் கொண்டு, கவனமாக உணவைச் சமைத்து, நன்றாக வந்திருப்பதாக திருப்தி அடைந்தாலும்... அதைச்...
https://pettagum.blogspot.com/2013/07/blog-post_7725.html?m=0
சப்பாத்தி சாப்பிட்டால் சிலருக்கு அஜீரணம் ஏற்படும். அதைத் தடுக்க என்ன செய்யலாம்?
மோரில் இஞ்சியும், பச்சை மிளகாயும் சேர்த்து அரைத்து,
சப்பாத்தி மாவில் விட்டு பிசைந்து, சப்பாத்தி செய்தால் புளிப்பும், காரமும்
சேர்ந்த சுவையான சப்பாத்தி கிடைக்கும். இந்த சப்பாத்தி
அஜீரணத்தைத் தடுக்கும்.
'புஸ்’ஸென்று உப்புகிற, சாஃப்ட்டான சப்பாத்தி செய்ய உதவுங்களேன்...
சப்பாத்தி மாவு பிசையும்போது கால் கப் பால் விட்டு பிசைய, எண்ணெய் விடாமலேயே... புஸ்ஸென்று மிருதுவான சப்பாத்தி ரெடி.
தொக்கு வகைகளை நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்த ஐடியா கொடுப்பீர்களா..?
பொன்னிறமான, முறுகலான அடை செய்வது எப்படி?
இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, மாவுடன் சேர்த்து அரைத்து அடை சுட்டால்... பொன்னிறமாக, முறுகலாக இருக்கும்.
வெங்காயத்துடன் சிறிதளவு சர்க்கரையைச் சேர்த்தால், அதிக எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வதக்கலாம்.
சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்க ஒரு ஆலோசனை ப்ளீஸ்...
சாம்பாருக்கு துவரம்பருப்பை வேக வைக்கும்போது, ஒரு ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து வேகவிடவும்.
பொரியலில் எலுமிச்சைச் சாறு அல்லது புளித்த தயிர்
விட்டு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, நீர் தெளித்து வேகவிட்டால்,
பாகற்காயின் கசப்பு தெரியாது.
சேனைக்கிழங்கை வேக வைக்கும்போது, சிலசமயம் சீக்கிரம் வேகாமல் சலிப்பு தருகிறதே... இதை சரிசெய்வது எப்படி?
உளுந்து வடை மாவு நெகிழ்ந்துவிட்டால் எப்படி சரியாக்குவது...
ஒரு பிடி மெது அவலைக் கலந்து வடை தட்டினால், தயாரிப்பதற்கு சுலபமாகவும், மிருதுத்தன்மை குறையாமலும் இருக்கும்.
கேரட், பீட்ரூட் வாடிவிட்டால், அவற்றை பயன்படுத்துவது எப்படி?
கேரட், பீட்ரூட்டை உப்பு கலந்த நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்தால், புதியது போல ஆகும்.
கரகர மொறுமொறு
பூரி செய்ய உதவுங்களேன்... பூரி கரகரவென்றிருக்க, மாவு பிசையும்போது,
பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து சேர்க்க வேண்டும்.

Post a Comment