...


நாப்தலின்
உருண்டைகளை பினாயில் பாட்டிலுக்குள் போட்டு வைத்துவிடுங்கள். இப்படி பயன்
படுத்தி வீட்டையும் குளியலறையையும் சுத்தம் செய்யும்போது, பூச்சிகள்
அண்டாமல் இருக்கும்.


துணிகளைத்
துவைக்கும்போது ஷர்ட் காலரில் இருக்கும் அழுக்கை அகற்ற பிளாஸ்டிக் பிரஷ்ஷை
பயன்படுத்தாதீர்கள். பாத்திரம் துலக்க பயன்படும் பிளாஸ்டிக் ஒயரினாலான
சுருளை உபயோகித்தால், துணி சீக்கிரத்தில் நைந்து போகாமல் இருக்கும். புடவை
ஃபால்ஸ்களில் படிந்த அழுக்கையும் இதுபோல் நீக்கலாம்.


ஏலக்காய்
சரியாக அரைபடாது. ஒரு துளி நெய்யில் இரண்டு நிமிடம் நிறம் மாறும் வரை
வறுத்து, பிறகு மிக்ஸியில் பொடித்தால் நைஸாகப் பொடிந்துவிடும். இதை
டப்பாவில் போட்டு மூடி வைத்தால் தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.


கோதுமை
தோசை வார்க்கும்போது, 'மெத்'தென்று துவண்டு சரியாக வார்க்க வராமல் போகும்.
கோதுமை மாவை வெறும் கடாயில் ஒன்றிரண்டு நிமிடங்கள் வறுத்து, பிறகு தண்ணீர்
சேர்த்து கரைத்து தோசை வார்த்தால் நன்றாக வரும்.


விருந்தாளிகளுக்கு
உணவு பரிமாறும்போது, தக்காளி சட்னி, சாஸ், வெங்காயச் சட்னி, ஊறுகாய்,
போன்ற சிவந்த நிறமுள்ள அயிட்டங்களையும், எண்ணெய், நெய் அதிகம் சேர்த்த
பொருட்களையும் நேரடியாக தட்டில் வைக்காதீர்கள். சிறிய கிண்ணங்களில் வைத்து
பரிமாறினால், தட்டுகளில் கறை படியாது. சுத்தம் செய்யவதும் எளிது.


பாத்திரங்களைத்
தேய்த்து கழுவி வைக்கும் பெரிய கம்பி வலைக்கூடையில் சிறிய ஸ்பூன்களை வைக்க
ஓட்டைகள் இல்லாமல் இருக்கும். இதற்கு, ஒரு சிறிய டீஸ்பூன் ஸ்டாண்டை, அந்த
வலைக்கூடையின் பக்க வாட்டில் கட்டிவிடுங்கள். டீஸ்பூன் கீழே விழாமல்
இருக்கும்.


துணிகளை
அயர்ன் செய்யும்போது தண்ணீர் தெளிப்பது வழக்கம். அந்த தண்ணீரில் சிறிது
பன்னீர் அல்லது யூடிகொலனை கலந்து விடுங்கள். சென்ட் போடாமலே ஆடைகள்
மணக்கும்.


வடை
மாவு நீர்த்துப் போய் விட்டால், ஒரு பிடி அவலை மாவுடன் கலந்து, ஐந்து
நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு வடையாக தட்டி எடுங்கள். அபாரமான ருசியில்
வடை மணக்கும்.
Post a Comment