அழகு சாதனப் பொருட்களை குறித்து டாக்டர் தரும் டிப்ஸ்...அழகு குறிப்புகள்
அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை குறித்து டாக்டர் தரும் டிப்ஸ்... அழகு சாதனப் பொருள் வாங்கும்போது அதில் சேர்...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_9283.html?m=0
அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை குறித்து டாக்டர் தரும் டிப்ஸ்...
அழகு
சாதனப் பொருள் வாங்கும்போது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் (Ingrediants)
மூலப் பொருட்களைப் பற்றிய விவரங்கள் இருக்கிறதா என்பதை முதலில் கவனிக்க
வேண்டும். அப்படி இல்லை எனில், வாங்காமல் இருப்பது நல்லது.
கலோமில்,
மெர்குரிக் குளோரைடு, மெரிகுரியோ என்பது போன்ற பெயர்களில் பாதரசச்
சேர்க்கையைக் குறிப்பிடுகின்றனர். எனவே, மேற்கண்ட வார்த்தைகள் இருந்தால்
அதில் நிச்சயம் பாதரசம் சேர்க்கப்பட்டு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
புரியாத மொழியில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அழகு சாதனப் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
எந்த
அழகு சாதனப் பொருட்களையும் பயன்படுத்துவதற்கு முன்பு, தோல் சிகிச்சை
நிபுணரை அணுகி, சருமத்தின் தன்மையைப் பரிசோதித்து அதன் பிறகு
பயன்படுத்துவது நல்லது.
ஹோமியோபதி மருந்துகளில் பாதரசத்தின் பயன்பாடு இருக்கிறதா? என்பது குறித்து ஹோமியோபதி மருத்துவ நிபுணர் ஜேசைய்யா பூவேந்தனிடம் பேசினோம்.
''உலகிலேயே மிக மோசமான ஆறு விஷங்களில் ஒன்று பாதரசம். பூச்சிக்கொல்லிகள், மின்குமிழ்கள் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது. ஹோமியோபதி மருத்துவத்தில் பாதரசம் சேர்க்கப்படுவது இல்லை.
வியாபார நோக்கத்தோடு அழகுக்காக மருந்துகள் தயாரிக்கப்படுவதைக்கூட நாங்கள் எதிர்க்கிறோம். தோலின் நிறத்தை மாற்றுவதற்காக சோப், க்ரீம் என இயற்கைக்கு மாறாகப் போனால், நோய்தான் வரும். தற்காலிக அழகைத் தரும் அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதைவிட நிம்மதியான தூக்கம், ஆரோக்கியமான உணவு, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைபிடியுங்கள்; இதுவே அழகைக் கூட்டும்'' என்கிறார் புன்னகையோடு.

Post a Comment