கேரமல் பப்பாதோய் தேவையானவை: கெட்டித் தயிர், காய்ச்சி ஆற வைத்த பால் - தலா ஒரு கப், இனிப்பு கண்டன்ஸ்டு மில்க் - 600 ம...
கேரமல் பப்பாதோய்
தேவையானவை: கெட்டித் தயிர், காய்ச்சி ஆற வைத்த பால் -
தலா ஒரு கப், இனிப்பு கண்டன்ஸ்டு மில்க் - 600 மில்லி, சோள மாவு, பாதாம்
விழுது - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், ஆப்பிள்
துண்டுகள் - கால் கப், நெய்யில் வறுத்த பிஸ்தா, முந்திரி துருவல், காய்ந்த
திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன், செர்ரி துண்டுகள் - சிறிதளவு, உப்பு -
ஒரு சிட்டிகை.
செய்முறை: ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை ஒரு டீஸ்பூன்
தண்ணீர் சேர்த்துக் கலக்கி, சிறிய கடாயில் விட்டு, அடுப்பில் வைக்கவும்.
அது பிரவுன் கலராக மாறியதும் இறக்கி ஆறவிடவும். இதுதான் கேரமல் !
இதனுடன் பால், தயிர், கண்டன்ஸ்டு மில்க், சோள மாவு, பாதாம் விழுது,
உப்பு, மீதியுள்ள சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்துக் கலக்கவும்.
ஆப்பிள் துண்டுகள், நெய்யில் வறுத்த பிஸ்தா, முந்திரி துருவல், காய்ந்த
திராட்சை ஆகியவற்றை அதில் சேர்க்கவும். ஒரு குக்கர் தட்டில் நெய் தடவி
இந்தக் கலவையை ஊற்றவும். குக்கருக்குள் ஒரு ஸ்டாண்ட் வைத்து, அதன் மேல்
கலவை இருக்கும் தட்டை வைத்து... ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். ஆறியதும்
எடுத்து, மேலே செர்ரி துண்டுகளால் அலங்கரித்துப் பரிமாறவும். இது, சத்தான
மாலை நேர ஸ்நாக்ஸ்.
கேரமல் பப்பாதோய்: சோள மாவுடன், ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு சேர்த்தால்... சுவையாகவும், கொஞ்சம் கெட்டியாகவும் இருக்கும்.
Post a Comment