உஸல்---சமையல் குறிப்புகள்
தேவையானவை: பச்சைப்பயறு – 500 கிராம் வெங்காயம் – 2 சீரகம் – கால் டீகரண்டி தனியா – கால் டீகரண்டி கடுகு – கால் டீகரண்டி பெருங்காயம் ஒரு சிட்டி...
பச்சைப்பயறு – 500 கிராம் வெங்காயம் – 2 சீரகம் – கால் டீகரண்டி தனியா – கால் டீகரண்டி கடுகு – கால் டீகரண்டி பெருங்காயம் ஒரு சிட்டிகை பச்சைமிளகாய் – 2 மஞ்சள் பொடி – கால் டீகரண்டி மிளகாயப்பொடி – 1 டீகரண்டி தனியாப்பொடியும் சீரக்பொடியும் – 1 டீகரண்டி கரம்மசாலா – அரை டீகரண்டி கறிவேப்பிலை – சில இணுக்குகள் சமையல் எண்ணெய் – 4 டீகரண்டி தேங்காய்த் துருவல் – 2 டீகரண்டி உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:ஒரு பாத்திரத்தில் பச்சைப்பயறைக் கொட்டி சுமார் 12 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து..
நீரை வடிகட்டி, அதை ஒரு சல்லடை அல்லது துணியில் கொட்டி மூடிபோட்டு 12 மணி நேரம் அப்படியே வைத்து விடவும். இதனால் பச்சைப்பயறில் முழைவிட ஏதுவாகும்.
பாத்திரத்தை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடேறியவுடன் சீரகம், கடுகு, பச்சைமிளகாய்த்துண்டுகள், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு அத்துடன் வெங்காயத்தையும் நறுக்கிப்போட்டு சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் முளைவிட்ட பயறு, சிறிதளவு தண்ணீர், மிளகாய்ப்பொடி, மஞ்சள்ப்பொடி, கரம்மசாலா, சீரக-தனியாப்பொடி, கறிவேப்பிலை, உப்பு தேங்காய் துருவல் ஆகியவற்றையும் இவற்றுடன் கொட்டி அரைமணி நேரம் வெகவிடவும்.
பின்குறிப்பு: முளைவிடக்கூடிய வேறு எந்த பயறு கடலை வகைகளைக்கொண்டும் இந்த உஸலைத் தயாரிக்கலாம்.
2 comments
பேரில் புதுமையான பச்சைபயறு சமையல். செய்து பார்க்க தூண்டுகிறது.
நன்றி.
Thank you By A.S. Mohamed Ali
Post a Comment