கறி கைமா ---சமையல் குறிப்புகள்!
கறி கைமா தேவையான பொருட்கள் கைமாக்கறி - கால் கிலோ கடலைப்பருப்பு - 100 கிராம் பட்டை - 1 லவங்கம் - 2 ஏலக்காய் - 1 இஞ்சி - 1 துண்டு பூண்டு - 6...
https://pettagum.blogspot.com/2012/01/blog-post_2637.html?m=0
கறி கைமா
தேவையான பொருட்கள்
கைமாக்கறி - கால் கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
பட்டை - 1
லவங்கம் - 2
ஏலக்காய் - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பல்
கசகசா - 1 ஸ்பூன்
மிளகு - ஒன்றரை ஸ்பூன்
சீரகம், சோம்பு - அரை ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி (துருவியது)
சி. வெங்காயம் -100 g, -ப. மிளகாய் 5, -கருவேப்பிலை, கொத்தமல்லி (பொடியாக வெட்டவும்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பட்டை முதல் சோம்பு வரை உள்ள பொருட்களை அரைக்கவும்.
குக்கரில் கைமா கறி, உப்பு, கடலைப்பருப்பு அரைத்த மசாலா சேர்த்து, அரை தம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை வதக்கி, வெந்த கறிக் கலவையையும் போட்டு சுருளக் கிளறி கொத்தமல்லி, தேங்காய்த் துருவலையும் சேர்த்து கிளறி வைக்கவும்.
இந்த பொடிமாஸை சப்பாத்தி நடுவில் வைத்து மசாலா சப்பாத்தி செய்யலாம்.
அல்லது பூரியில் நடுவில் வைத்து பொரித்து எடுக்கலாம்
Post a Comment