தூள் பக்கோடா-ஃபாஸ்ட் ஃபுட் மேளா!
தூள் பக்கோடா-ஃபாஸ்ட் ஃபுட் மேளா! தேவையானவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒர...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_5688.html?m=0
தூள் பக்கோடா-ஃபாஸ்ட் ஃபுட் மேளா!
தேவையானவை: நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்துடன் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து, சிறிது தண்ணீரைத் தெளித்துப் பிசறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசைந்த கலவையை நன்றாக கைகளால் உதிர்த்துப் போட்டு உதிரியான பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.
Post a Comment