இறால் சில்லி 65--சமையல் குறிப்புகள்
இறால் சில்லி 65 தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ அரிசிமாவு - 2 கை சோளமாவு - 1 கை மைதா - 1 கை முட்டை - 1 இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்...
https://pettagum.blogspot.com/2011/10/65.html?m=0
இறால் சில்லி 65
தேவையான பொருட்கள்
இறால் - 1/2 கிலோ
அரிசிமாவு - 2 கை
சோளமாவு - 1 கை
மைதா - 1 கை
முட்டை - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 3 டீஸ்பூன் (அரைத்த விழுது)
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும்.
* அரைத்த அரிசி மாவு, சோளமாவு, மைதா, மஞ்சள்தூள் அரைத்த மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகப்பொடி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, எலுமிச்சம் பழச்சாறு அனைத்தையும் நீர் தெளித்து பேஸ்ட் பதத்தில் பிசையவும்.
* இறாலை இக்கலவையில் புரட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
--------------------------------------------------------------------
Post a Comment