மதுர் வடை...சமையல் குறிப்புகள்
மதுர் வடை தேவையானவை: கடலை மாவு, அரிசி மாவு, ரவை, மைதா - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5, இஞ்சி - சிறிய...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_8314.html?m=0
மதுர் வடை
தேவையானவை: கடலை மாவு, அரிசி மாவு, ரவை, மைதா - தலா அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5, இஞ்சி - சிறிய துண்டு, நறுக்கிய கொத்தமல்லி - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கரகரப்பாக பொடித்த வேர்க்கடலை - கால் கப், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்துடன் உப்பு, நெய் சேர்த்து நன்றாக பிசிறி வைத்தால்... அதுவே தண்ணீர் விட்டுக்கொள்ளும். அந்த வெங்காயக் கலவையில் கடலை மாவு, அரிசி மாவு, ரவை, மைதா, நறுக் கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பொடித்த வேர்க்கடலை, வெள்ளை எள் மற்றும் சீரகம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க... வித்தியாசமான சுவையில் மதுர் வடை ரெடி!
மதுர் வடை: கடலை மாவுக்குப் பதிலாக, கடலைப்பருப்பை ஊற வைத்து அரைத்து வடை செய்தால்... சுவை சூப்பரோ சூப்பர்!
Post a Comment