பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்! அமுத மொழிகள்,
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்! இன்றைக்கு அன்பு என்பது ரொம்பவே குறுகிப் போய் விட்டது. நம்மை வயிற்றில் சுமந்த தாயையும், தோளில் சுமந்த தந்...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_1620.html?m=0
பெற்றவர்களிடம் அன்பை காட்டுங்கள்!
இன்றைக்கு அன்பு என்பது ரொம்பவே குறுகிப் போய் விட்டது. நம்மை வயிற்றில் சுமந்த தாயையும், தோளில் சுமந்த தந்தையையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு தனிவாழ்வு காணத் துடிக்கும் பிள்ளைகளையே அதிகமாகக் காண முடிகிறது. இன்று வீதிக்கு வீதி முதியோர் இல்லங்கள் முளைக்கக் காரணம், பெற்றோரை வெறுக்கும் பிள்ளைகளால் தான். மனிதநேயம் மரித்துப் போய்விட்டதோ என்று சொல்லுமளவுக்கு நிலைமை!
""தாய் தந்தையரிடம் மிகக்கண்ணியமான முறையிலே நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவரோ முதுமையை அடைந்துவிட்ட நிலையில், உம்மிடம் இருந்தால் "சீ' என்று கூடக் கூறாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீர். மேலும் பணிவுடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக,'' என்று இறைவன் திருக்குர்ஆனிலே கூறுகிறான். இறைவனின் கட்டளையை நாம் ஏன் மறந்து போனோம்? அவனது வார்த்தைகளை நம் வாழ்விலே நடைமுறைப்படுத்தி விட் டால், "முதியோர் இல்லங்கள்' என்ற வார்த்தையைக் கூட பழைய வரலாற்றுப் பக்கங்களில் தானே தேட வேண்டியிருக்கும்!
அவசியம் சிந்தித்துப் பார்ப்போம். அண்ணலார் நபிகள் நாயகம் அவர்கள் , "தாயின் பாதத்தில் சொர்க்கம் இருக்கிறது,'' என்று நவின்றுள்ளார்கள். சொர்க்கத்தைத் தேடி எந்த வானத்தில் அது இருக்கலாம் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. நம் வீட்டிலிருக்கும் நம் அன்னைக்குச் செய்கிற தொண்டின் மூலமே அவர்களது காலடியில் கிடைக்கிற சொர்க்கத்தை அடைந்து களித்து விடலாம் என்பது தானே அண்ணலார் பெருமான் சொன்னதற்குப் பொருள்! ஒன்றை மட்டும் உறுதியாய் உங்கள் உள்ளத்திற்குள் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். நாளைய பொழுதில் நாமும் முதுமைக்குள் விழப்போகிறவர்கள் தான். நாம் இன்று நம் பெற்றோரிடம் காட்டும் "கண்டுகொள்ளாமை', "நேசமற்ற நிலை' என்ற குணங்கள் நம் பிள்ளைகளின் மனதிலும் பசைபோட்டு ஒட்டிக்கொள்ளத்தான் செய்யும். நாளை...நாமும் இதை எதிர்நோக்க வேண்டியிருக்கும்! எனவே இன்று முதலேனும் நம் முதிய பெற்றோரிடம் அன்பு காட்ட மறந்து விட வேண்டாம்.
Post a Comment