வயிற்றுக்கு வைரமாகும் இஞ்சி சாறு--இயற்கை வைத்தியம்
இயற்கை வைத்தியம் வயிற்றுக்கு வைரமாகும் இஞ்சி சாறு இஞ்சிச் சாற்றுடன் சமளவு எலுமிச்சை சாறு, புதினா சாறு, தேன் சேர்த்து தினமும...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_8087.html?m=0
இயற்கை வைத்தியம்
வயிற்றுக்கு வைரமாகும் இஞ்சி சாறு
இஞ்சிச் சாற்றுடன் சமளவு எலுமிச்சை சாறு, புதினா சாறு, தேன் சேர்த்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டு வர செரியாமை, வாந்தி, வயிற்று உப்புசம், மஞ்சள் காமாலை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும். இஞ்சியை இடித்து சாறெடுத்து சற்று சூடாக்கி, தலையில் பற்றுப் போட தலைவலி, நீரேற்றம் குணமாகும். வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறும், தேனும் கலந்து குடித்துவர இருமல், சளி, குணமாகும். இஞ்சிச் சாற்றுடன், மாதுளம் பழச்சாறு சம அளவு கூட்டி, பாதியளவு தேனும் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும். தண்ணீரில் இஞ்சி,சீரகம்,கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர செரியாமை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
Post a Comment