சமையல் குறிப்புகள்! கோதுமை கஸ்டர்டு
கோதுமை கஸ்டர்டு தேவையானவை: கோதுமை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், பால் - அரை லிட்டர், மாம்பழம் - 1 (துண்டுகளாக நறுக்கவும்), மாம்பழ எ...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_6331.html?m=0
கோதுமை கஸ்டர்டு
தேவையானவை: கோதுமை - 200 கிராம், சர்க்கரை - 200 கிராம், பால் - அரை லிட்டர், மாம்பழம் - 1 (துண்டுகளாக நறுக்கவும்), மாம்பழ எசன்ஸ் - அரை டீஸ்பூன், மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு.
செய்முறை: கோதுமையை முந்தைய நாள் காலையிலேயே ஊற வைத்து, மறுநாள் மிக்ஸியில் அரைத்து வடி கட்டி கோதுமைப் பால் எடுத்து தனியாக வைக்கவும். பாலைக் கொதிக்க வைத்து, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பால் கொதித்துக் கொண்டு இருக்கும் போதே, கோதுமைப் பாலை விட்டு கிளறவும். கெட்டியான கஸ்டர்டு பதம் வந்ததும் மாம்பழத் துண்டுகளை சேர்க்கவும். சிறிது நேரம் கிளறி, அடுப்பில் இருந்து இறக்கி எசன்ஸ், ஃபுட் கலர் சேர்க்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்.
மாம்பழத் துண்டுகளைச் சேர்க்கும்போது, மாம்பழ கூழ் 3 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ள லாம்.
கூடுதல் சுவை கிடைக்கும்.
----------------------------------------------------------------------------
Post a Comment