சமையல் குறிப்புகள்! காபி கேக்
காபி கேக் தேவையானவை: கடலை மாவு, நெய் - தலா - 200 கிராம், முந்திரி, பாதாம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கிலோ, கெட்டியான காபி டிகாஷன...
https://pettagum.blogspot.com/2011/06/blog-post_268.html?m=0
காபி கேக்
தேவையானவை: கடலை மாவு, நெய் - தலா - 200 கிராம், முந்திரி, பாதாம் - தலா 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - அரை கிலோ, கெட்டியான காபி டிகாஷன் - அரை டம்ளர்.
செய்முறை: வெறும் கடாயில் கடலை மாவை வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். நெய்யை லேசாக உருக்கி, மாவில் ஊற்றி, கட்டி இல்லாமல் கரைக்கவும். முந்திரி, பாதாமை ஊற வைத்து நைஸாக அரைத்து, கரைத்து வைத்திருக்கும் கடலை மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். கேக் பதம் வந்ததும் காபி டிகாஷனை ஊற்றி நன்றாகக் கலந்து கிளறி, நெய் தடவிய தாம்பளத்தில் கொட்டி, துண்டுகள் போடவும்.
காபி வாசனையுடன் பிரமாதமாக இருக்கும் இந்த கேக்.
சிறிதளவு சாக்லேட் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். கடலை மாவு வாசனை அதிகம் வராமல் இருக்கும்.
Post a Comment